இலவச கண் சிகிச்சை மற்றும் கண் லென்ஸ் பொருத்தும் மருத்துவ முகாம்

இராமநாதபுரம் மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச்சங்கம், நிலக்கோட்டை தமியான் கண் மருத்துவமணை, கொக்கூரணி புனித வின்சென்ட் தே பவுல் சபை, பங்குத்தந்தை, மற்றும் பங்கு இறைமக்கள் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை மற்றும் கண் லென்ஸ் பொருத்தும் முகாம் இன்று கொக்கூரணிபுனித செபஸ்தியார் திருத்தலத்தில் நடைபெற்றது.முகாமை கொக்கூரணி பங்குத்தந்தை ஆனந்த் தொடங்கிவைத்தார். சிறப்பழைப்பாளர்களாக காவணக்கோட்டை ஊராட்சிமன்றத்தலைவர் பூபதி வைரவன்,ஊ.ம.து.த மகாலிங்கம், வார்டு உறுப்பினர் மலைக்கண்ணன், கொக்கூரணி கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கிராமநிர்வாக உதவியாளர் பால், தேவிபட்டினம் அரசு இலவச கண் சிகிச்சை மற்றும் இலவச கண் லென்ஸ் பொருத்தும் முகாம் கண் மருத்துவ ஆய்வாளர் தவமணி கலந்துகொண்டார்கள்.

வின்சென்ட் தே பவுல் சபை உறுப்பினர்கள் ஆரோக்கியசாமி,சூசைமிக்கேல்,அந்தோணிசாமி ,பவுலா,சுசீலா,தமியான் கண் மருத்துவமணை மருத்துவக்குழு அருட்சகோதரிகள் தவம், லிடியா ஆகியோர் கலந்துகொண்டனர். மருத்துவமுகாமில் 100க்கும் மேற்பட்ட பயணாளிகள் கலந்து கொண்டனர்.இங்கு நடைபெற்ற மருத்துவ முகாமில் கண் அறுவை செய்ய 13 பயணாளிகள் கண்டறியப்பட்டு மேல்சிகிச்சைக்காக நிலக்கோட்டை அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை கொக்கூரணி புனித வின்சென்ட் தே பவுல் சபை உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!