பொங்கல் பரிசு தொகுப்பு பயனாளிகள். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

ராமநாதபுரம் மாவட்டம் கூட்டுறவு துறை சார்பில், தமிழக மக்கள்பொங்கல் பண்டிகையை இனிதே கொண்டாடும் வகையில் 21 வகை மளிகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை கூட்டுறவுத்துறை சார்பில் வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராமநாதபுரம் பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையைதமிழக மக்கள் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்கள், முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கும் அரிசி, வெல்லம், நெய், கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, முந்திரி பருப்பு உள்பட 21 பொருட்கள் தொகுப்பு, முழு நீளக்கரும்பு வழங்கதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்அறிவித்தார்.ராமநாதபுரம் மாவட்டத்தில் 3,89,784 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பாிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. பரமக்குடி சீனியம்மாள் கூறுகையில்:-பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கியுள்ளார்கள். இந்த பொருட்கள் அனைத்தும் தரமானதாகவும், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பண்டிகைக்கு முன் பெற்றுக்கொண்டேன். பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!