முத்துப்பட்டிணத்தில் பனை விதைகள் சேகரிக்கும் பணிநடைபெற்றது.

இந்நிகழ்வில் உடற்கல்வி ஆசிரியர் சிவராஜ், ஆசிரியர் பாதுஷா,மக்கள் பாதை நூருல் அமீன் ஆகியோர் கலந்து கொண்டு 200 பனை விதைகளை சேகரித்தனர்.உடற்கல்வி ஆசிரியர் சிவராஜ் கூறுகையில், கிராமங்களில் பனை விதைகளை நடவு செய்ய தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். மேலும் பனை, வேம்பு, புங்கன் போன்ற பல்வேறு வகையான விதைகளை சேகரித்து குளம், ஏரி, சாலை ஓரங்கள், பொது இடங்களில் விதைத்துவிட்டால் இன்னும் சில வருடங்களில் நிறைய மரங்களை உருவாக்க முடியும். அப்போது தான் இயற்கையோடு நாம் வாழ முடியும் என்றார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!