மீனவர்கள் 4பேர் படுகொலையை கண்டித்து மக்கள் பாதை இயக்கம் சார்பாக கோரிக்கை.

இராமநாதபுரம் மீனவர்கள் 4பேர் படுகொலையை கண்டித்து தமிழக அரசிற்கு மக்கள் பாதை இயக்கம் சார்பாக இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடந்த 18-ந்தேதி 214 விசைப்படகுகளில் 700-க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.இதில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மெசியா (வயது 50), உச்சிப்புளி வட்டாண்வலசை கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (45), திருப்புல்லாணி ஒன்றியம் தாவனேந்தல் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் (28), மண்டபம் இலங்கை அகதி முகாமை சேர்ந்த டார்வின் சாம்சன் (27) ஆகியோரது படகு மீது இலங்கை கடற்படை படகு மோதியது. இதில் மீனவர்களின் படகு மூழ்கி 4 மீனவர்களும் பலியானார்கள்.தொடர்ந்து இலங்கை அரசின் கடற்படை இந்திய மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதலும் படுகொலையும் நிகழ்த்துகிறது.கடல்தான் வாழ்கை, வாழ்வாதாரம் என்று உயிரை கொடுத்து பாடுபடும் மீனவர்களிடையே அச்சத்தையும், வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலாக அண்டை நாடான இலங்கை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி நேர்மையாளர் சகாயம் இ.ஆ.ப ஓய்வு அவர்களின் தலைமையிலான மக்கள் பாதை இயக்கம் இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குனர் அவர்களிடம் இன்று கோரிக்கை வைக்கப்பட்டது.இராமநாதபுரம் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் சரவணக்குமார், கிளாட்வின் மற்றும் மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர்கள் பாம்பன் இராமு, புதுமடம் இப்ராகீம், இராமேஸ்வரம் நகர பொறுப்பாளர்கள் அந்தோணி, முருகன், மண்டபம் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர் பூபாலன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.இது குறித்து விளக்கமளித்த இணைஇயக்குனர் அவர்கள் மேற்படி 4 மீனவர்களின் இழப்பில் அரசு தனது கண்டனத்தை அரசிற்கு தெரிவித்துள்ளது, உடற்கூறாய்வு அறிக்கையின் அடிப்படையில் மீனவ குடும்பங்களுக்கு முதலமைச்சரின் வழிகாட்டலின் படி 10 லட்சம் வழங்கப்படுகிறது. மேலும் மீனவர்களுக்கு தகுந்த வழிகாட்டல் செய்து மீன்பிடிக்க அறிவுறுத்தப்படும் என தெரிவித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!