மாநில நல்லாசிரியர் காலமானார்

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார். இவர் அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்தார். இவரது மனைவி சிரோன் மணி பரமக்குடி ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியராக பணியாற்றி வருகிறார். நடப்பாண்டு மாநில நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். உடல் நலம் பாதித்த அவர் இன்று (16.12.2020) காலமானார். ரெட்டை கதிர் பட இயக்குநர் ராமநாதபுரம் செல்வம் இயக்கத்தில் எதிர்வினை எனும் விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு ஆசிரியர்கள், கல்வித்துறை, வருவாய் துறை அலுவலர்கள், பணியாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடல் அருப்புக்கோட்டை அருகே பரளச்சி கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!