உச்சிப்புளி அருகே வாகனங்கள் கவிழ்ந்து விபத்து

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி வட்டாரத்தைச் சேர்ந்த பெண்களை மண்டபத்தில் உள்ள இறால் கம்பெனிக்கு வேலைக்கு ஏற்றிக்கொண்டு கார் இன்று மதியம் சென்றது. உச்சிப்புளி அருகே அரியமான் பகுதியில் சென்றபோது முன்னால் சென்ற சரக்கு வாகனத்தை முந்தியபோது ஒன்றுடன் ஒன்று உரசியது. இதில் நிலைதடுமாறி இரண்டு வாகனங்களும் கவிழ்ந்தன. இதில் அலைகாத்தான்வலசையைச் சேர்ந்த இளம்பெண் காவிரி காயமடைந்தார். இது குறித்து உச்சிப்புளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!