ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் ஆற்றாங்கரை வடக்கு கடற்கரையில் பெரிய திமிங்கலம் அழுகிய நிலையில் இறந்து இன்று காலை கரை ஒதுங்கியது. இது குறித்து அப்பகுதி மீனவர்கள் ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் சுதீஷ்க்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கரை ஒதுங்கிய 9 மீட்டர் நீளம், 6 மீட்டர் பருமன், 3 டன் எடையில் 7 முதல் 9 வயதுள்ள ஆண் திமிங்கலம் வனத்துறை ஊழியர்கள் மூலம் ஜேசிபி இயந்திரம் கொண்டு மீட்கப்பட்டது. கால்நடை மருத்துவர் நிஜாமுதீன் முன்னிலையில் உடற்கூறு செய்யப்பட்டு, அதே இடத்தில் புதைக்கப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









