இராமநாதபுரம் மாவட்டத்தில் காணாமல்போனவர்களை கண்டறியும் சிறப்பு முகாம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் ‘காணாமல் போனவர்களை கண்டறியும் சிறப்பு முகாம்” இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் ஏ1 திருமண மஹாலில் இன்று (22.11.2020) நடந்தது.இராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் என்.எம்.மயில்வாகனன் முன்னிலை வகித்தார். இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .இ.கார்த்திக், தலைமை வகித்தார். இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 7 உட்கோட்டங்களிலும், 159 நபர்கள் காணாமல் போனது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணையில் இருந்து வருகிறது.

மேற்படி, வழக்குகளில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் பொருட்டு 136 புகார்தாரர்களுக்கு சம்மன் சார்பு செய்யப்பட்டதில், 122 புகார்தாரர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம், காணாமல் போனவர்கள் பற்றிய தற்போதைய தகவல்கள் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றிய மேலதிக விபரங்கள் தொடர்பாக உட்கோட்டம் வாரியாக ஆய்வு செய்யப்பட்டது. இதில் 26 வழக்குகளில் காணாமல் போனவர்களின் விபரம் கேட்டறிந்து மேல்நடவடிக்கை நிறுத்தம் செய்யப்பட்டது. 96 வழக்குகளில் காணாமல் போனவர்களின் தற்போதைய விபரங்கள் கேட்டறிந்து, சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் தொழிற்நுட்ப உதவியுடன் இவ்வழக்குகளில் காணாமல் போனவர்களை விரைந்து கண்டுபிடிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த சிறப்பு முகாம் மூலம் திரட்டப்பட்ட தகவலின் அடிப்படையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு காணாமல் போனவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் என இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், தெரிவித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!