ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைச் சேர்ந்தவர் தனசேகரன். இவர், தீபாவளி பட்டாசு விற்பனைக்கு உரிமம் பெற செப்.2ல் இணைய தளத்தில் விண்ணப்பித்தார். இது தொடர்பாக ராமநாதபுரம் சார் ஆட்சியர் வாகன ஓட்டுநர் சிங்காரத்தை, தனசேகரன் தொடர்பு கொண்டார். தனது செல்வாக்கு மூலம் உரிமம் பெற்றுத்தருவதாக கூறி தனசேகரனிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் தனசேகரன புகார் அளித்தார். இதன்படி ரசாயனம் தடவி 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சிங்காரத்திடம், தனசேகரன் இன்று (04.11.2020) மதியம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி உன்னி கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் குமரேசன், ராஜேஸ்வரி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் சிங்காரத்தை சுற்றி வளைத்து பிடித்தனர். சிங்காரத்திடம் இருந்து ரூ. 15 ஆயிரத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். இது தொடர்பாக சார் ஆட்சியர் அலுவலக ஊழியர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது


You must be logged in to post a comment.