ராமநாதபுரத்தில் தூய்மை காவலர்களுக்கு கவுரவம்

பாரதப்பிரதமர் நரேந்திர மோடியின் 70 வது பிறந்த தின சேவை வார விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ராமநாதபுரம் நகர் பாஜக., மற்றும் பொன்குளம் விக்னேஸ்வர பாலசுப்ரமணிய சுவாமி கோயில் டிரஸ்ட் சார்பில் தூய்மை காவலர்கள் பாராட்டப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்ட பாஜக., அலுவலகம் முன் நடந்த நிகழ்ச்சிக்கு நகர் பாஜக., தலைவர் ஆர்.வீரபாகு தலைமை வகித்தார்.

தூய்மை காவலர் 50 பேருக்கு டிரஸ்ட் சார்பில் நிதி வழங்கி பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சுப.நாகராஜன் கவுரவித்தார். மாவட்ட துணைத் தலைவர் கே.விஜயராணி, மாவட்ட செயலாளர் எஸ்.முத்துசாமி, மாவட்ட செயலாளர் ஆர்.மணிமாறன், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் குமரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுபநாகராஜன், அலுவலக செயலாளர் ஐ.ராஜேஷ் குமார், நகர் துணை தலைவர்கள் வீ.வீரசேகரன், பிரபாதேவி, ஜெகன்பிரசாத், எஸ்.ராகேஷ் குமார், நகர் பொதுச்செயலாளர்என்.மாரிமுத்து நகர் செயலாளர் எம்.பூபதிராஜா, நகர் செயற்குழு உறுப்பினர்கள் எல்.சுரேஷ், பாக்யலட்சுமி, கிளை தலைவர்கள் மகாலட்சுமி, யோகேஷ்குமார், ரமேஷ், செல்வராஜ், மாரி, சாந்தி, ஆறுமுகம், வீரபத்திரன், ரவீந்திரன், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!