இராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்யவும், நலத்திட்ட உதவிகள் வழங்கவும் வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்யவும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 22,ம் தேதி ராமநாதபுரம் வருகிறார். அதற்கான ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் ப
ரமக்குடி கீர்த்தி மஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தர்மர், ஆணிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்வர்ராஜா, ஆலோசனை வழங்கினார். இதில் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் சேதுபாலசிங்கம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் ஜெயஜோதி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் தர்வேஷ், ஒன்றிய செயலாளர்கள் முத்தையா, நாகநாதன்,குப்புசாமி,காளிமுத்து, அங்குசாமி,ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் சரவணகுமார், இளைஞர் பாசறை மாவட்டச் செயலாளர் பால்பாண்டி, மாணவரணி செயலாளர் செந்தில்குமார், மாவட்ட சிறுபான்மை பொருளாளர் அப்துல் மாலிக், மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஜெய லானி சினிகட்டி, பாலாமணி மாரி, இலக்கிய அணி செயலாளர் திலகர், பார்த்திபனூர் நகர் செயலாளர் வினோத், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் தினேஷ், உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் நகர் செயலாளர் கணேசன் நன்றி கூறினார். மாவட்ட செயலாளர் முனியசாமி பேசியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 22,ம் தேதி வருகை தருகிறார் அது சமயம் அவருக்கு மாவட்ட எல்லையான மறிச்சுக்கட்டி மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பார்த்திபனூர் தொகுதியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. வழி நெடுகிலும் தொடர்ந்து பல இடங்களில் வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும், திரளாக கலந்து கொள்ள வேண்டும். இதுவரை எந்த மாவட்டத்திலும் கொடுக்காத வகையில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை செயலாளர்கள் முதல்வரை சந்திக்க வரவேண்டும். முதல்வரின் வருகை இந்த மாவட்டத்தில் தேர்தல் பணியை துவங்குவதற்கான அச்சாரம் ஆகும் இவ்வாறு பேசினார்.


You must be logged in to post a comment.