உச்சிப்புளி அருகேநகைக்காக பெண் கொலை வியாபாரி கைது

இராமநாதபுரம் மாவட்டம் இரட்டை யூரணியைச் சேர்ந்தவர் காமராஜர். இவரது மனைவி விஜயராணி, 52. இவர் உடலில் ரத்தக் காயங்களுடன் நேற்று (17.9.2020) மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அடிப்படையில் உச்சிப்புளி போலீசார் சம்பவ இடம் சென்று . விசாரித்தில் விஜயராணி கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் செயின் மாயமானது தெரிய வந்தது. இதனால் இக்கொலை நகைக்காக நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. ராமநாதபுரம் எஸ்பி., கார்த்திக் சம்பவ இடத்தை பார்வையிட்டார். கொலைக்கான காரணம் குறித்து உச்சிப்புளி போலீசார் விசாரித்து வந்தனர். இக்கொலை தொடர்பாக கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த ஐஸ் வியாபாரி பாலமுருகன் (40) என்பவரை உச்சிப் புளி போலீசார் கைது செய்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!