ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி காவல் நிலைய சரகம், எட்டிவயலைசேர்ந்த கோவிந்தன் என்பவர் மனைவி துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு தனக்கு சொந்தமான வயலுக்கு களை எடுக்க சென்றார்.
மாலை 6 மணி வரையில் வீடு திரும்பாததால் தனது உறவினர்களுடன் இரவு 12:30 மணி வரை தேடியும் காணாமல், மறுநாள் 27.11.2019 ம் தேதி காலை மீண்டும் அந்த பகுதியில் தேடி சென்ற போது கோவிந்தன் வயலுக்கு மேற்கே உள்ள முனியசாமி என்பவருக்கு சொந்தமான வயலில் கோவிந்தனின் மனைவி அணிந்து இருந்த தோடு, மூக்குத்தி இல்லாமல் இறந்த நிலையில் கிடந்தது தொடர்பாக கோவிந்தன் புகார் அளித்ததின் பெயரில் சத்திரக்குடி காவல் நிலைய குற்ற எண்.144/2019 பிரிவு 302, 379 இ.த.ச வின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதணையில் இறந்து போன பெண்ணானவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விபரம் தெரிய வந்ததால் மேற்படி சட்டப்பிரிவை 376, 302, 379 இ.த.ச வாக மாற்றம் செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வந்தது. இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்தும் பொருட்டு, பரமக்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் சத்திரக்குடி காவல் ஆய்வாளர் அமுதா, சார்பு ஆய்வாளர்கள் குகனேஸ்வரன் மற்றும் முருகானந்தம், தலைமை காவலர் கருப்பசாமி (1966), சத்திரக்குடி தனிப்பிரிவு தலைமை காவலர் முனியசாமி (1081), தலைமை காவலர் சூர்யா (728) மற்றும் முதல்நிலை காவலர் முருகேசன் (611) ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் இவ்வழக்கின் குற்றவாளியை கைது செய்ய தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று 15.9.2020-ம் தேதி அதிகாலை தேவிபட்டினம் சரகம் புல்லங்குடி கிராமம் (இருப்பு) சத்திரக்குடி சரகம் தீயனூர் கிராமத்தை சேர்ந்த வடிவேல் மகன் ரவி என்பவரை சந்தேகத்தின் பெயரில் மேற்படி கொலை வழக்கு சம்பந்தமாக அழைப்பாணை கொடுத்து 15.9.2020-ம் தேதி விசாரணைக்கு அழைத்து விசாரணை செய்ததில், ரவி என்பவர் கோவிந்தன் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்தும், கொலை செய்தும், மூக்குத்தி மற்றும் தோடுகளை எடுத்து கொண்டு சென்று விட்டதாக குற்றத்தை தானாக ஒப்புக்கொண்டு எட்டிவயல் குரூப் கிராம நிர்வாக அலுவலர் ஜீவபிரியா, கிராம நிர்வாக உதவியாளர் அழகேசன் ஆகியோர் முன்னிலையில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். ரவியை கைது செய்து தொடர் விசாரணை செய்ததில் இறந்த பெண்ணிடமிருந்து திருடி சென்ற மூக்குத்தி, சம்பவத்தின் போது அணிந்திருந்த உடைகள், செல்போன் ஆகியவை கிராம நிர்வாக அலுவலர், தலையாரி ஆகியோர் முன்னிலையில் கைப்பற்றப்பட்டது. இவ்வழக்கின் குற்றவாளியான ரவி இதேபோல் வேறு ஏதேனும் குற்றம் செய்துள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. மேற்கண்ட வழக்கை 10 மாதங்களுக்கு பின்னர் திறமையாக விசாரித்து துப்பு துலக்கி குற்றவாளியை கண்டுபிடித்த தனிப்படையினரை தென்மண்டல காவல்துறை தலைவர் டாக்டர் முருகன், இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் என்.எம்.மயில்வாகனன், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் வெகுவாக பாராட்டி பத்திரம் மற்றும் வெகுமதி அளித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












