இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கான 2018-2019 ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தாமோருக்கு, இராமநாதபுரம் நாடாளுமன்ற
உறுப்பினர் கே. நவாஸ்கனி கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் அனுப்பிய கடிதம்.இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கான 2018-19 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகையானது, 117 கிராமங்களுக்கு இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதில், தாங்கள் நேரடி கவனம் கொண்டு சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தை வலியுறுத்தி உடனடியாக காப்பீட்டு தொகையை வழங்க ஆவன செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள பெருவிவசாயிகளுக்கான காப்பீட்டுத் தொகை 6,901 விண்ணப்பங்கள் இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.ஏதேனும் தவறு உள்ளதா என சோதிக்கவே தாமதம் என காப்பீட்டு நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.அப்படி இருக்கும் பட்சத்தில் அதனை உடனடியாக சோதித்து, விரைவில் காப்பீட்டு தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்.இராமநாதபுரம் மாவட்டம் மிகவும் வறட்சியான மாவட்டம். இங்கு விவசாயிகள் விவசாயம் செய்வதே மிகவும் சவாலான சூழல் உள்ள மாவட்டம்.விவசாயம் விளையாத நிலையில் பயிர் காப்பீட்டு தொகைகளும் தாமதம் ஆவதால் விவசாயிகள் கூடுதல் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர். தாங்கள் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


You must be logged in to post a comment.