இராமநாதபுரம் மாவட்டம் கடுக்காய்வலசை அரசு மேல்நிலைப்பள்ளியில்2020-21 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
மானாங்குடி ஊராட்சி தலைவர் பரமேஸ்வரி பத்மநாபன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் நளவழுதி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செ. சேதுபதி, கடுக்காய்வலசை கிராம நாட்டாமை நல்லாசிரியர் கணேசன், தலைமை ஆசிரியர் முனைவர் சு. கணேசபாண்டியன், சத்துணவு அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய குழுவினர் மானாங்குடி ஊராட்சியில் வீடுகள் தோறும் சென்று சமூக இடைவெளியை பின்பற்றி கல்வி விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். அரசு பள்ளியில் சேரும் மாணாக்கருக்கு பள்ளி கல்வித் துறை வழங்கும் கல்வி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை மற்றும் சலுகைகள் குறித்து விளக்கமளித்தனர். தலைமை ஆசிரியர் சு. கணேசபாண்டியன் கூறுகையில், கடுக்காய்வலசை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு கடந்த கல்வி ஆண்டை போல், நடப்பு கல்வி ஆண்டும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்தாண்டை விட கூடுதலாக 30 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார்.





You must be logged in to post a comment.