வார இதழ் நிருபர் மீது மணல் மாஃபியாதாக்குதல்.நடவடிக்கை கோரி ராமநாதபுரம்ஆட்சியரிடம் மனு

குற்றம் குற்றமே வார இதழ் மண்டல செய்தியாளர் கா.மகேந்திரன் மீது ராமநாதபுரத்தில் தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ் புலிகள் கட்சி ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலர்மு.தமிழ்முருகன், ராமநாதபுரம் ஆட்சியரிடம் அளித்த மனு:குற்றம் குற்றமே புலனாய்வு வார இதழின் மதுரை மண்டல செய்தியாளராகபணியாற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த கா.மகேந்திரன் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர் . ராமநாதபுரம் அருகே பட்டா நிலத்தில் சவடு மண் என்ற பெயரில் கொள்ளை போகும் மணல் காங்கிரஸ் புள்ளிக்கு துணை போகும் அதிகாரிகள் என்ற தலைப்பில் குற்றம் குற்றமே புலனாய்வு வார இதழ் இணைய தளத்தில் படத்துடன் செய்தி ஆக.19 ல் வெளியானது.இதை தொடர்ந்து, அலைபேசி எண். 93619 98645 லிருந்து ஆக. 22 காலை 9:21 மணிக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் மகேந்திரனை அவதூறு பேசி கொல்லாமல் விடமாட்டேன் என மிரட்டல் விடுத்தார். அன்று காலை 9:53 மணி, 10:09 மணி என மீண்டும், மீண்டும் தொடர்பு கொண்ட மர்ம நபர் அசிங்கமான வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார் . இது குறித்து கேணிக்கரை போலீசில் ஆக.25 ல் மகேந்திரன் புகார் அளித்தார். போலீஸ் தரப்பில் மனு ரசீது மட்டும் மகேந்திரனிடம் கொடுக்கப்பட்டு வேறந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை . இந்நிலையில் ஆக.27 காலை 10:30 மணியளவில், ராமநாதபுரம் தொழிலாளர் நல அலுவலகம் அருகே நின்ற மகேந்திரனை அப்பகுதியில் நின்ற டி என் 59 ஏஇ 5564 என்ற பதிவெண் கொண்ட டிப்பர் லாரியில் இருந்து இறங்கிய முகம் தெரிந்த பெயர், முகவரி தெரியாத 4 பேர், மகேந்திரனை . அழைத்து அசிங்கமான வார்த்தையால் பேசி, கம்பியால் தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து கேணிக்கரை போலீசில் மகேந்திரன் அன்றைய தினமே புகார் அளித்தார் . இதற்கும் இது நாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாதிய வன்மத்துடன் நிருபர் மகேந்திரனை அசிங்கமான வார்த்தையால் பேசி, தாக்குதல் நடத்தி, கொலை மிரட்டல் விடுத்த சமூக விரோதிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!