இராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியம் சமத்துவபுரம் வெற்றி நகர் கிராமத்தில் ராமநாதபுரம் மாவட்ட சைல்டுலைன் (கூட்டு மற்றும் துணை மையம்) மற்றும் ராமநாதபுரம், ராமேஸ்வரம் ரயில்வே குழந்தைகள் உதவி மையம் சார்பாக குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் வரவேற்று பேசினார்.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் துரைராஜ், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராஜேஷ் கண்ணா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் , சைல்டுலைன் மற்றும் ராமேஸ்வரம் ரயில்வே சைல்டுலைன் இயக்குனர் எஸ்.கருப்பசாமி , தேவிபட்டினம் துணை மைய மற்றும் ராமநாதபுரம் ரெயில்வே சைல்டுலைன் இயக்குனர் தேவராஜ், ராமேஸ்வரம் துணை மைய இயக்குனர் மன்னர்மன்னன், கிராமத் தலைவர் பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் 62 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துப் பொருட்கள் மற்றும் 100 மாஸ்க் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கொரோனா நோய் தொற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது, சைல்டுலைன் 1098 செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட சைல்டுலைன்(கூட்டு மற்றும் துணை மையம்)மற்றும் ராமநாதபுரம், ராமேஸ்வரம் ரயில்வே குழந்தைகள் உதவி மையம் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி இறுதியாக ரயில்வே சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர்வெங்கட்ராமன், சுமுகி நன்றியுரை கூறினார்.

You must be logged in to post a comment.