ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே மேல பண்ணை குளம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக ஒரு கும்பல் காருடன் நிற்பதாக அபிராமம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ஜான்ஸி ராணி தலைமையில் போலீசார் மேல பண்ணைக்குளம் விரைந்தனர். அப்போது செந்தில், சேதுபதி ஆகியோரை அந்த கும்பல் பயங்கர ஆயிதங்களால் வெட்டி கொலை செய்ய துரத்தினர். போலீசாரை கண்டதும் அக்கும் பல் காரில் தப்பித்துச் செல்ல முயன்றனர். அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.விசாரணையில் மதுரை என்ற செந்தில் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த சந்திரன் மகன் எனவும் இவர் தற்போது திருப்புவனம் அருகே மணலூர் பகுதியில் வசிப்பவர் எனவும், மற்றொருவர் சுனாமி சேதுபதி என தெரிந்தது. இரு சக்கர வாகனத்தில் நாட்டுத்துப்பாக்கியுடன் இவர்கள் அபிராமம் வந்ததும் தெரிந்தது. இவர்கள் இருவருக்கும், சென்னை ஆவடி மூவேந்திரன் 38, ரஞ்சித் 30, கொடுங்கையூர் மோனீஸ் குமார் 26, மதுரை நரிமேடு ரசூல் என்ற தேவதாஸ் 35, சென்னை ஆவடி ராஜேஷ் 28 ஆகியோருக்கும் இடையேதொழில் போட்டி தொடர்பான முன் விரோதத்தால் ஒருவரை ஒருவர் தீர்த்து கட்ட திட்ட மிட்டு அபிராமம் அருகே வந்தது தெரிந்தது. இதனடிப்படையில் மூவேந்திரன், ரஞ்சித், மோனீஸ் குமார், ரசூல் என்ற தேவதாஸ் ராஜேஷ் ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் ஜான்ஸி ராணி புகாரில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்து 1.300 கிலோ கஞ்சா, கார், ஒரு லிட்டர் பெட்ரோல், வாள், கத்தி, அரிவாள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். சார்பு ஆய்வாளர் விஜயபாஸ்கர் புகாரில் மதுரை என்ற செந்திலை கைது செய்து இவரிடமிருந்து இரு சக்கர வாகனம், நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.


You must be logged in to post a comment.