காவல் துறையில் வழிப்பறி, கொள்ளை, கூட்டுக்கொள்ளை, கொலை தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் புலனாய்வு பணிகளில் சிறப்பாக பணியாற்றும்
காவல் துறையினருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் கடந்த 2018 ஆண்டு முதல் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான அப்பதக்கத்திற்கு தமிழக காவல் துறையைச் சேர்ந்த காவல் பெண் ஆய்வாளர்கள் 5 பேர் உள்பட 6 பேரை உள்துறை அமைச்சகம் தேர்வு செய்தது.இதன்படி தேர்வு செய்யப்பட்டுள்ள இராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி காவல் ஆய்வாளர் ஜி.ஜான்சி ராணி, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் மகளிர் காவல் ஆய்வாளர் எம்.கவிதா, நீலகிரி மாவட்ட மது விலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் ஏ.பொன்னம்மாள், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் ஆய்வாளர் சி. சந்திர கலா, பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் காவல் ஆய்வாளர் ஏ.கலா, சென்னை பெருநகர் மத்திய குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளார் டி.வினோத்குமார்ஆகியோருக்கு சுதந்திர தினத்தன்று பதக்கம் வழங்கப்படுகிறது


You must be logged in to post a comment.