ராமநாதபுரத்தில் நிழற்குடை கட்டுமான பணி சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் ஆய்வு

ராமநாதபுரத்தில் பிள்ளையார் கோயில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு வெளியூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் நின்று செல்கின்றன. பிரதான பேருந்து நிறுத்தம் போன்ற இங்கு பாதுகாப்பான நிழற்குடை இல்லாததால் மழை, வெயில் காலங்களில் மக்கள் சிரமம் அடைந்தனர். பயணிகள் நலன் கருதி புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம். மணிகண்டனிடம் கோரினர். இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பிள்ளையார் கோயில் பேருந்து நிறுத்தத்தில் புதிய நிழற்குடை அமைக்க சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் நிதி ஒதுக்கீடு செய்தார். தற்போது முழு வீச்சில் நடைபெற்று வரும் அப்பணிகளின் தரம் குறித்து சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் ஆய்வு செய்தார். கட்டுமான பொருட்களை ஆய்வு செய்து கட்டடத்தை தரமான முறையில் கட்ட ஒப்பந்தகாரருக்கு அறிவுறுத்தினார். மக்களின் கோரிக்கையை ஏற்று பயணிகள் நிழற்குடை அமைக்க உடனடி நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினர் எம்.மணிகண்டனை பொதுமக்கள் பாராட்டினர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!