மண்டபம் மீனவர் 30 பேருக்கு நவாஸ்கனி எம்பி ரூ.3 லட்சம் நிவாரணம்

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் தென்கடலில் 2019 டிச. முதல் வாரத்தில் ஏற்பட்ட சூறாவளி காற்றில் விசைப் படகுகள் சேதமடைந்து மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்டோருக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி இன்று (07.8.2020? நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தனது சொந்த நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட மீனவர்கள்அயூப் கான், காதர் முகைதீன், மாடசாமி, நவாஸ், ஜாகீர் உசேன், அந்தோணி, தர்மசீலன் ஜேம்ஸ், தயூப் கான், ஷேக் அப்துல் காதர், ரஹ்மத்துல்லா, அப்துல் ஹன்னான், அஜ்மீர் ஹாஜா, ஜெய்னுலாபுதீன், இளங்கோவன், செய்யது பைசூல் கான், அப்துல் வாஹித், ராஜரத்தினம், இஸ்மத் நூன், ராமமூர்த்தி, முகமது இத்ரீஸ், காதர், முகமது பைசூல், ரஜபு ரஹ்மான், முகமது அபுபக்கர், இபுறாம் ஷா, அம்ஜத் அலிகான் ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் நிவாரண உதவி வழங்கினார்.பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரண தொகையை பெற்றுத் தர முயற்சி எடுப்பதாக கூறினார்.இதில் திமுக., மாவட்ட பொறுப்பாளர் காதர்பாஷா முத்துராமலிங்கம், நகர் செயலாளர் டி.ராஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், மாவட்ட தலைவர் ஹாஜி வருசை முஹமது, திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தெளபீக் அலி (ஒன்றிய கவுன்சிலர்), மேற்கு ஒன்றிய செயலர் ஜீவானந்தம்,தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.அஹமது தம்பி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கே.சம்பத் ராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!