ராமநாதபுரம் கோரல் சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா

ராமநாதபுரம் கோரல் சிட்டி ரோட்டரி சங்க ஜூலை 2020-ஜூன் 2021 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தலைவர் முனைவர் எஸ்.சோமசுந்தரம் செயலர் இன்ஜினியர் பி.சுப்ரமணி, பொருளாளர் இன்ஜினியர் என்.கார்த்திகேயன் ஆகியோருக்கு முன்னாள் மாவட்ட ஆளுநர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.முன்னாள் தலைவர் இன்ஜினியர் கே.அருணகிரி வரவேற்றார். மூன்றாம் மண்டல உதவி ஆளுநர் டி.சண்முகம், பட்டயத் தலைவர் ஆடிட்டர் எஸ்.லோகநாதன், பட்டயச்செயலர் பி.டி.ராஜா ஆகியோர் பேசினர்.

டாக்டர் ஜலீல், ஆசிரியர்கள் சிவபாலன் (தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர், சிவக்குமார் (தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மண்டபம் வட்டார முன்னாள் பொருளாளர்) ஆகிய புதிய உறுப்பினர்களு க்கு ரோட்டரி முத்திரை வழங்கப்பட்டது. சேர்மன்கள் எச்.காபத்துல்லா (பன்னாட்டு சேவை -), ஒன்றிய கவுன்சிலர் ஜி.மருதுபாண்டியன் (மக்கள் தொடர்பு), இன்ஜினியர்  எம்.மாரி  (மாவட்ட திட்டம்) தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலர் இன்ஜினியர் டி.ராஜேஷ், ஊடக வெளியீட்டாளர் டி.குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!