மீனவர் நலனுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வரவுள்ள இந்த தேசிய மீன்வள கொள்கை-2020 ஐ எதிர்த்து பாம்பன் நாட்டு படகு மீனவர்கள் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்த நாட்டு படகுகளில் கருப்புகொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.தேசிய கடல் மீன்வள சட்ட மசோதாவை கொண்டு
வந்துள்ள மத்திய அரசை கண்டித்து மீனவர்கள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், எல்லை தாண்டியதாக பொய் குற்றச்சாட்டில் படகுகளுக்கு அபராதம் விதிப்பதை மீன்வளத்துறை திரும்ப பெற வேண்டும், ஏற்றுமதியாகும், இறால், நண்டு, கணவாய் உள்ளிட்டவைகளுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன் சமூக இடைவெளியுடன் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல், படகுகள் சிறைபிடிப்பு தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர்.


You must be logged in to post a comment.