ராமநாதபுரம் மாவட்ட டாஸ்மாக் விற்பனையாளர்கள் கோரிக்கை

தமிழ்நாடு டாஸ்மாக் விற்னையாளர் சங்க மாநில பொதுச்செயலர் எம்.ராஜா, பணியின்போது கொரானா பாதிப்பால் நேற்றிரவு உயிரிழந்தார். இதனையடுத்து பய உணர்வுடன் பணியாற்றும் டாஸ்மாக் விற்பனையாளர்கள் தங்கள் உயிருக்கு உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை ராமநாதபுரம் டாஸ்மாக் உதவி மேலாளரிடம் டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் இன்று( 21.7.2020) மனு அளித்தனர். டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் காப்பீட்டு தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரானா பாதிப்பால் உயிரிழக்கும் பணியாளர் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர அரசுப் பணி வழங்க வேண்டும், அனைத்து டாஸ்மாக் பணியாளர்களுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சைக்கான முழு செலவை அரசு ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட செயலாளர் ஆர்.கே.இளங்கோ, மாவட்ட பொருளாளர் கே.ரத்தினக் குமார், மாவட்ட அமைப்பு செயலாளர் கே.டி.சித்தநாதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.என்.குமார ராஜா, செய்தி தொடர்பாளர் ஏ.தனசேகரன், பிரசார செயலர் ஏ.மோகன்குமார், துணை தலைவர்கள் வி.மதியழகன், ஆர்.மணிகண்டன், எம்.ராஜசரவணன், காசி, பி.செந்தில்குமார், கே.கண்ணன், மாவட்ட துணை செயலர்கள் தனிக் கொடி, பி.காளைராஜன், எஸ்.சுரேஷ், கே. நாகநாதன், கே.பொன்னழகு, பி.சேகர், துணை பொருளாளர் எஸ்.குமாரசிங்கம் உள்ளிட்டோர் உடன் சென்றனர். டாஸ்மாக் விற்பனையாளர் சங்க மாநில பொதுச்செயலர் ராஜா மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மாவட்ட தலைவர் எம்.பூபதி குமார் தலைமையில் பணியாளர்கள் கருப்பு பேட்ஜ், முகக் கவசம் அணிந்து பணியாற்றினர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!