இராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கழகம் இணைந்து கல்லூரி பேராசிரியர்களுக்கான 6 நாள் கருத்தரங்கு காணொளி மூலம் நடைபெற்றது.மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஏற்பாடு செய்திருந்த இந்த கருத்தரங்கை கல்லூரி தாளாளர் சின்னதுரை அப்துல்லா துவக்கி வைத்தார். அவர் கூறியதாவது” கொரனா நோய் பரவலால் அகில இந்திய தொழில்நுட்ப கழகம் இணையதளங்கள் மூலம் கருத்தரங்கை நடத்த அனுமதிப்பதால் பல்வேறு புகழ் பெற்ற கல்லூரிகளின் பேராசிரியர்கள் பயிற்சி அளிக்கின்றனர். இது போன்ற நிகழ்ச்சிகள் பேராசிரியர்களின் ஆராய்ச்சி மற்றும் கற்பிக்கும் திறன் மேம்பட. உதவுகிறது. இந்த கருத்தரங்கிற்கு 2 லட்சம் நிதி உதவியை அகில இந்திய தொழில்நுட்ப கழகம் அளித்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. மாதம் ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதால் பல ஆசிரியர்கள் பங்கேற்று தங்கள் கற்பிக்கும் திறன் மற்றும் ஆராய்ச்சி திறன் ஆகியவற்றை அதிகரிக்க இந்த நிகழ்ச்சி உதவும் என்பதில் ஐயமில்லை “
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் முனைவர். மகேந்திரன் வரவேற்றார்.கல்லூரி முதல்வர் முனைவர் பெரியசாமி தலைமை தாங்கினார் மற்றும் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். மேலும் சிறப்பு விருந்தினர் முனைவர். பாஸ்கரன் , பேராசிரியர் & டீன் , ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை, தியாகராஜர் பொறியியல் கல்லூரி அவர்கள் பேசுகையில் இன்றைய சூழ்நிலையில் அனைத்து பேராசிரியர்களும் மென்மையான கணினி தொழில்நுட்பங்கள் குறித்து கற்றுக்கொள்ள வேண்டும் அப்படி கற்றுக் கொள்வதற்கு இதுபோன்ற கருத்தரங்கங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கின்றது என்று கூறினார்.முனைவர்.சித்தி சமீம் பாத்திமா நன்றி உரையாற்றினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்


You must be logged in to post a comment.