ராமநாதபுரம் தீக்கதிர் நிருபர் தந்தை மறைவு. செய்தியாளர்கள் இரங்கல்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தவர் ஆர்.மோகன். இவர் தீக்கதிர் நாளிதழ் ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை தனது 97 வயதில் தோழர் ரெங்கசாமி நேற்றிரவு(18.7.2020) மறைந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்த இறக்கும் வரை உறுப்பினராக இருந்தார். பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர். மானாமதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அருகே சிறிய கடை நடத்தி வந்தார். 97 வயதிலும் தான் ஆரோக்கியமுடன் இருக்க மூச்சு பயிற்சி செய்து வந்ததே காரணம் என கூறுவார். கட்சி அலுவலக செங்கொடியை மே தினத்தன்று ஏற்றி சிறப்பு சேர்த்தவர். அவரின் மறைவிற்கு மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட நாளிதழ், காட்சி ஊடக செய்தியாளர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!