சாயல்குடியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ., தன்னார்வலர்கள்

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி சேர்ந்த 55 வயது நபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு (12.7.2020) உயிரிழந்தார். அவரது உடலை பெற்று நல்லடக்கம் செய்ய அவரது உறவினர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகளிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனடிப்படையில் அவரது உடலை பெற்றுக்கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ., கட்சி தன்னார்வலர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எஸ். செய்யது முஹம்மது இப்ராகிம் தலைமையில் உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதல்களின் அடிப்படையில் முழு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நல்லடக்கம் செய்தனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!