ஏடிஎம்., மையத்தில் கொள்ளை முயற்சி

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பேருந்து முதல் நிறுத்தம் பகுதியில் இந்தியன் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்., இயந்திரம், பணம் செலுத்தும் இயந்திரங்கள் இயங்கி வந்தன. நேற்று (12.7.2020) முழு ஊரடங்கு என்பதால் ஜன நடமாட்டம் இல்லை. இதையடுத்து இவ்விரண்டு இயந்திரங்களையும் மர்மநபர்கள் உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். இன்று 13.7.2020 காலை இம்மையத்தில் பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர்கள் கொடுத்த தகவல் படி ஏடிஎம் மையத்தை தங்கச்சிமடம் போலீசார் சோதனையிட்டனர். இ

து குறித்து அப்பகுதியில் விசாரித்து வருகின்றனர். உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தில் பதிவான கை ரேகை தடயங்களை சேகரித்தனர்.அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்ததில் நேற்றிரவு 11:30 மணி அளவில் மர்மநபர் ஒருவர் முகத்தை மறைத்தபடி உள்ளே நுழைந்து பெரிய கல்லால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிந்தது. அந்த மர்ம நபரை தங்கச்சிமடம் இன்ஸ்பெக்டர் சந்தானமாரி தலைமையில் போலீசார் தேடி வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!