இராமேஸ்வரம் யாத்திரைப் பணியாளர் சங்க உறுப்பினர்களுக்கு கனரா வங்கி கடனுதவி

இராமநாதபுரம் கனரா வங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் கொரோனா நிவாரண நடவடிக்கையாக கனரா வங்கி சார்பாக இராமேஸ்வரம் அகில இந்திய யாத்திரைப் பணியாளர் சங்க உறுப்பினர்களுக்கு கடனுதவி பெறுவதற்கான ஆணைகளை இன்று வழங்கினார்.இராமநாதபுரம் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கும், முழு ஊரடங்கால் வருவாய் இன்றி சிரமப்படும் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், இராமேஸ்வரம் அகில இந்திய யாத்திரைப் பணியாளர்கள் சங்கத்தைச் சார்ந்த 460 உறுப்பினர்களை தலா 5 நபர்கள் வீதம் 92 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்களுக்கு இராமநாதபுரம் கனரா வங்கி சார்பாக தலா ரூ.2.50 லட்சம் வீதம் ரூ.2.30 கோடி மதிப்பில் கடனதவிகள் வழங்கப்படுகின்றன. இராமநாதபுரம் கனரா வங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் பயனாளிகளுக்கு கடனுதவி பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், இந்திய கனிமவள மேம்பாட்டுக் கழக இயக்குநர் து.குப்புராமு, கனரா வங்கி உதவி பொது மேலாளர் எம்.காந்தி, இராமநாதபுரம் முதன்மை மேலாளர் பி.சந்திரசேகரன்உட்பட வங்கிப் பணியாளர்கள், யாத்திரைப் பணியாளர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!