தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தங்கச்சிமடத்தில் ரத்த தான முகாம்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை, மகப்பேறு குழந்தைகள் நலம் உள்ளிட்ட பிரிவுகள் மட்டும் செயல்படுகிறது. இந்நிலையில் இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவ மனையில் ஏழை, எளிய நோயாளிகளுக்கு சிகிச்சையின் போது ரத்தம் அதிக அளவில் தேவைப்படுகிறது.அதை பூர்த்தி செய்யும் நோக்கில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் தெற்கு மாவட்ட மருத்துவஅணி செயலாளர் நசுருதீன் ஆலோசனையின் அடிப்படையில் தங்கச்சிமடம் கிளை சார்பில் இன்று (08.7.2020) தங்கச்சிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது.இம்முகாமை மாவட்ட தலைவர் ஏ.அய்யூப்கான் துவக்கி வைத்தார். இம்முகாமில் 34 பேர் ரத்த தானம் வழங்கினர்.மாவட்ட செயலாளர் ஜெ.எம்.ஆரிப்கான், மாவட்ட பொருளாளர் ரஹ்மான்அலி, மாவட்ட துணைத்தலைவர் பசீர், மாவட்ட துணைச்செயலாளர் மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தங்கச்சிமடம் கிளை தலைவர் கரீம் ஹக் சாகிப் மற்றும் நிர்வாகிகள் முகாம் ஏற்பாடுகளை செய்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!