இராமநாதபுரம் மாவட்டம் மண்ட முகாம் அண்ணா கடை வீதியில் வசிப்பவர் என்.வேல்முருகன். வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற இவர் அதிமுக எம்ஜிஆர் மன்ற நிர்வாகியாக உள்ளார். இவர் தனது சொந்த செலவில் மண்டபம் முகாம் சிங்காரத்தோப்பு, அண்ணா குடியிருப்பு, அரசு ஊழியர் குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கொரானா பேரிடர் கால ஆறாம் கட்ட நிவாரண பொருட்கள் வழங்க முடிவு செய்தார்.
அதிமுக மாவட்ட செயலர் எம்.ஏ.முனியசாமி, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.மணிகண்டன் ஆகியோர் அறிவுறுத்தல் படி கொரானா பேரிடர் காலமாக அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி தொகுப்பை நகர் செயலர் கே.எம்.ஏ.சீமான் மரைக்காயர் வழங்கி தொடங்கி வைத்தார். இதில் அதிமுக., தலைமை கழக பேச்சாளர் மா.மைதீன், பேரூராட்சி முன்னாள் உறுப்பினர்கள் எல்.சீனி காதர் முகைதீன், எம்.நம்புவேல், மேலமைப்பு பிரதிநிதி ஏ.சீனி சகாபுதீன், வர்த்தக சங்க செயலர் ஆறுமுகம், மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கே.பூபதி, ஜெயலலிதா பேரவை உறுப்பினர்கள் எஸ்.லோகநாதன், பி.அண்ணா துரை, எம்.தாண்டவ மூர்த்தி, பி.சின்னச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






You must be logged in to post a comment.