ராமநாதபுரம், ராமேஸ்வரத்தில் ரயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன், எச்எம்எஸ் ஊழியர்கள் ராமநாதபுரம், ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரத்தில் எச்எம்எஸ் மாவட்ட தலைவர் ஏ.சண்முகவேலு, ராமேஸ்வரத்தில் எஸ்ஆர்எம்யு., மண்டபம் கிளை உதவித் தலைவர் எம்.நம்பு மாரிமுத்து, ராமநாதபுரம் அரண்மனை முன் எச்எம்எஸ் மாவட்ட செயலர் எஸ்.குமரகுருபரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை மத்திய அரசு விலக்கி கொள்ள வேண்டும், ஆள் குறைப்பை கைவிட வேண்டும், காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும், பணி நேரம் மற்றும் பணி சுமையை குறைக்க வேண்டும், தொழிலாளர் கட்டாய ஓய்வுத்திட்ட முடிவை அமல்படுத்தக்கூடாது, பஞ்சப்படி உள்ளிட்ட இதர சலுகைகளை நிறுத்தக்கூடாது, இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. எஸ்ஆர்எம்யு, எச்எம்எஸ் நிர்வாகிகள் தினேஷ்குமார், பாஸ்கரன், செல்வன், முத்துக்குமார், செந்தில்குமார், பூமி, மாரியப்பன், முத்துமாரி, நாகலட்சுமி, சுப்ரமணியன், சேது ராஜா, உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்ட ஏற்பாடுகளை சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் மண்டபம் கிளை செயலர் சண்முகவேலு செய்திருந்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!