இராமநாதபுரம் அருகே ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா

இராமநாதபுரம் அருகே சக்கரகோட்டையில் மணிமுத்தாறு சரகம் 12வது பட்டாலியன் கம்பெனி காவலர் குடியிருப்பு கட்டுமான பணி வளாக பகுதியில் டாக்டர் ஆபஜெ அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை மூலம் ஒரு கோடி மரக்கன்று நட்டு பராமரிக்கும் திட்டத்தின் கீழ் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா இன்று (01.7.2020) நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமை வகித்து, மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். மாவட்ட கனிமவள துணை இயக்குனர் கே.விஜயராகவன், டாக்டர் ஆபஜெ அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை இணை இயக்குநர் ஏபிஜெ எம்.ஜெ. ஷேக் சலீம், மணிமுத்தாறு போலீஸ் 12வது பட்டாலியன் சரக கமாண்டன்ட் டி.கார்த்திகேயன், துணை கமாண்டன்ட் ரவிச்சந்திரன், மாவட்ட கனிம வள அலுவலர் சுஹதா ரஹிமா, அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை ஆலோசகர் எம்.கராத்தே பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்ஸ்பெக்டர் மோகன் நன்றி கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!