ராமேஸ்வரம் கடலில் பலியான மீனவர் குடும்பங்களுக்கு ராமநாதபுரம் எம்எல்ஏ., நிவாரண நிதி

ராமேஸ்வரத்தில் இருந்து ஹெட்ரோ என்பவரின் விசைப்படகில் ராமேஸ்வரம் கிழக்காடு ரெஜின் பாஸ்கர், பாம்பன் அக்காள்மடம் மலர் வண்ணன், தங்கச்சிமடம் சூசையப்பர் பட்டினம் சேசு, பாம்பன் அக்காள்மடம் சேதுபதி நகர் நஸ்ரேன் மகன் ஆஸ்டின் சுசீந்தர் ஆகியோர் 13.6.2020ல் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 பேரும் 16.6.2020 வரை கரைக்கு திரும்பவில்லை. மாயமான மீனவர் நான்கு பேரில் ஜேசு மட்டும் மீட்கப்பட்டார்.

ரெஜின் பாஸ்கர், ஆஸ்டின் சுசீந்தர், மலர் வண்ணன் உடல்கள் அழுகிய நிலையில் மல்லிபட்டினம் கடற்கரையில் கரை ஒதுங்கின. பலியான மீனவர்கள் ரெஜின் பாஸ்கர், மலர் வண்ணன், மீட்கப்பட்ட மீனவர் ஜேசு ஆகியோர் குடும்பங்களுக்கு ராமநாதபுரம் சட்டமன்ற அதிமுக., உறுப்பினர் டாக்டர் எம்.மணிகண்டன் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண நிதியாக தலா ரூ.50 ஆயிரம் வழங்கினார். அரசு நிவாரண நிதி தொடர்பாக தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று மீன்வளத்துறை மூலம் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும். பலியான மீனவர் குடும்பங்களில் யாரேனும் ஒருவருக்கு கல்வி தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் முதல்வரிடம் எடுத்துரைப்பதாகவும் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் உறுதியளித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!