ராமநாதபுரம் அருகே கடற்படை விமான வீரர்கள் உள்பட 90 பேருக்கு கொரானா தொற்று

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரானா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், கடந்த இரண்டு நாட்களில் 58, 111 என விஸ்வரூபம் எடுத்துவருகிறது. நேற்று (22.6.2020) முன்தினம் 35 ஆண்கள், 22 பெண்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று (ஜூன் 23) மாலை நிலவரப்படி வரை 8 பெண்கள், 13 ஆண்களுக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து இரவு நிலவரப்படி 66 ஆண்கள்,24 பெண்கள் என 90 பேர் என நேற்று ஒரே நாளில் 111 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. நேற்றிரவு நிலவரத்தில் உச்சிப்புளி கடற்படை விமான தள வீரர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என 29 பேர்,ராமநாதபுரத்தில் 11 ஆண்கள், 8 பெண்கள் பரமக்குடியில் 8 ஆண்கள், 2 பெண்கள், கமுதியில் 3 ஆண்கள், ஒரு பெண், கடலாடியில் 5 ஆண்கள், போகலூரில் ஒரு வயது பெண் குழந்தை, 2 ஆண்கள், கீழக்கரையில் 2 பெண்கள் உள்பட 66 ஆண்கள், 24 பெண்களுக்கு கொரானா தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த இரண்டு நாட்களில் 54 பெண்கள், 114 ஆண்கள் என 168 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மாவட்டத்தில் கொரானா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 500 ஐ எட்டி வருகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!