ராமநாதபுரம் அருகே பெரியபட்டினம் கிராமத்தில் சார்பில் கொரானா பேரிடர் காலத்தில் வாழ்வாதாரம் பாதித்த 500 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி தொகுப்பை வாப்புகனி அறக்கட்டளை நிறுவனர் என்.தாகா கான்
கடந்த 5 நாட்களாக வழங்கி வருகிறார். தற்போது கொரானா
வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் மக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என அறக்கட்டளை நிறுவனர் என்.தாகா கான் விழிப்புணர்வு ஏற்படுத்தி முகக்கவசங்களை இலவசமாக வழங்கி வருகிறார். பெரியபட்டினத்தில் உள்ள ரேஷன் கடைகள், கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் தேவைக்கேற்ப முகக்கவசம், கிருமி நாசினி மருந்து வழங்கி வருகிறார். தினமும் காலை கபசுர குடிநீர் தயார் செய்து பொதுமக்களுக்குஅறக்கட்டளை சார்பில் வழங்கப்படுகிறது. பெரியபட்டினத்தில் உள்ள சலூன் கடைகாரர்களுக்கு கையுறை வழங்கி வருகின்றனர். பேருந்து நிறுத்தம், தெருக்கள், கிருமி நாசினி மருந்து தெளிப்பு பணியை வாப்புகனி அறக்கட்டளை மேற்கொண்டுள்ளது. கொரானா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கிருமி நாசினி மருந்து, நிவாரண உதவிகளை வழங்கி வரும் வாப்புகனி அறக்கட்டளையின் சேவை மனப்பான்மையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்


You must be logged in to post a comment.