ராணுவ வீரர் நினைவிடத்தில் ராமநாதபுரம் எம்எல்ஏ., அஞ்சலி

லடாக் எல்லை பகுதி கல்வான் பள்ளித்தாக்கில் சீன வீரர்களுடன் நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடுக்கலூர் பழனி வீர மரணம் அடைந்தார். இவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் நேற்று (18.6.2020) அடக்கம் செய்யப்பட்டது. பழனி நினைவிடத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை முன்னாள் அமைச்சரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் எம்.மணிகண்டன்.(அதிமுக) இன்று (19.6.2020) மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், பழனியின் தந்தை காளிமுத்து, அவரது மனைவி வானதி தேவி, அவரது மகன் பிரசன்னா, மகள் திவ்யா ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். பழனி மனைவி வானதி தேவியிடம் ரூ. 2 லட்சம், பழனி தந்தை காளிமுத்துவிடம் ரூ.25 ஆயிரம் நிதி வழங்கினார். முதல்வர் உத்தரவு படி வானதி தேவிக்கு ஆசிரியை பணி பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஒன்றிய அதிமுக செயலாளர்கள் திருவாடானை மதிவாணன்,ஆர்.எஸ்.மங்கலம் நந்திவர்மன்,திருப்புல்லாணி கருப்பையா,கீழக்கரை நகர் செயலர் ஜகுபர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!