ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு திருமண விழாவில் பாராட்டு

ராமநாதபுரத்தைச் சேர்ந்த இன்ஜினியர் பிரஜோத்- பரமக்குடியைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி கவிதா. இவர்களது திருமணம், ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் சமூக இடைவெளியுடன் மிக எளிய முறையில் நடந்தது. மணமகனும், சமூக ஆர்வலருமான பிரஜோத், ரெட் கிராஸ் சொசைட்டி ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 11 பேரின் கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கை தேசிய ஊரடங்கு காலத்தில் சிறப்பான பணியை பாராட்டி சீருடை துணி வழங்கி கவுரவித்தார்.

இதல், ரெட் கிராஸ் மாவட்ட செயலர் எம்.ராக்லாண்ட் மதுரம், ஜூனியர் ரெட் கிராஸ் கல்வி மாவட்ட கன்வீனர்கள் எம்.ரமேஷ் (ராமநாதபுரம்), எம்.பாலமுருகன் (மண்டபம்), ரெட் கிராஸ் பொருளாளர் சி.குணசேகரன், நிர்வாகக்குழு உறுப்பினர் டி.ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் முனைவர் தேவி உலகராஜ் செய்திருந்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!