இந்திய – சீன எல்லைப் பகுதியான லடாக் எல்லையில் ஜூன் 6-ஆம் தேதி நடந்த ராணுவ துணைத் தளபதிகள் அளவிலான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கக் கூடிய வகையில் எந்தவொரு நடவடிக்கையிலும் இந்திய, சீன ராணுவத்தினர் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று இரவு இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ராணுவ தரப்பில் உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் ராணுவ அதிகாரி, ராணுவ வீரரான ராமநாதபுரம் மாவட்டம்திருவாடானை அருகே கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் பழனி 40 மற்றும் ஒரு வீரர் மரணம் அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து பழனியின் இறுதிச்சடங்கு நாளை(17.6.2020) திருவாடானை தாலுகா கடுக்கலூர் கிராமத்தில் அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது. மரணமடைந்த பழனிக்கு வானதி தேவி 34 என்ற மனைவியும், பிரசன்னா 10 என்ற மகனும், திவ்யா 8 என்ற மகளும் உள்ளனர். இவரது தம்பி இதய கனியும் இந்திய ராணுவத்தில் பணியாற்றுகிறார்.ராஜஸ்தானில் இருந்து கிளம்பிய இதய கனி தற்போது டில்லியில் உள்ளார். நாளை காலை சொந்த ஊருக்கு வந்த சேருகிறார். பழனியின் உடல் நாளை மதியம் மதுரை விமான நிலையம் வந்து சேரும் என இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You must be logged in to post a comment.