மாயமான மீனவர் நால்வரில் ஒருவர் மீட்பு. அரசு மருத்துவமனையில் அனுமதி

ராமேஸ்வரத்தில் இருந்து ஹெட்ரோ என்பவரது விசைப்படகில் ராமேஸ்வரம் கிழக்காடு ரெஜின் பாஸ்கர் 43, பாம்பன் அக்காள்மடம் (தெற்கு) மலர்வண்ணன் 43, தங்கச்சிமடம் சூசையப்பர் பட்டினம்(மேற்கு)சேசு 60, பாம்பன்அக்காள்மடம் சேதுபதி நகர் நஸ்ரேன் மகன் ஆனந்த் (எ) சுஜூந்தர் 19 ஆகியோர் 13.6.2020ல் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். ஞாயிறு காலை கரை திரும்ப வேண்டிய இவர்கள், மூன்று நாட்களாகியும் திரும்பவில்லை. இதையடுத்து சக மீனவர்கள் 2 படகுகளில் சென்று மாயமான மீனவர் 4 பேரை தேடினர். மீனவர்கள் குறித்த தகவல் இன்றி கரை திரும்பியதால் ராமேஸ்வரத்தில் பதட்டம் நீடித்தது.

இந்நிலையில், மாயமான மீனவர்கள் சென்ற விசைப்படகு கோட்டைப்பட்டினம் கடலில் மூழ்கியது. இதில் உயிருக்கு போராடிய சேசுவை அப்பகுதி மீனவர்கள் மீட்டு மணல்மேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். எஞ்சிய மூன்று மீனவர்களின் நிலை குறித்து தகவல் இல்லாததால் உறவினர்கள் இடையே பதற்றம் நீடிக்கிறது. மீனவர் சேசு கூறுகையில், சனிக்கிழமை இரவு விசைப்படகின் இன்ஜின் உள்ள கூலேண்டு ஆயில் கசிவு ஏற்பட்டு ஆயில் டேங்க் மூலம் கடல் நீர் படகை சூழ்ந்தது. இதனால் கடலில் மூழ்கிய படகில் இருந்த நால்வரும் ஐஸ் பெட்டியை பிடித்து கொண்டு கடலில் தத்தளித்தோம். எஞ்சிய மூவரும் ஐஸ் பெட்டியின் உதவியால் அருகே உள்ள தீவுகளில் ஒதுங்கியிருக்க வாய்ப்பு உள்ளது. அந்த பகுதியில் தேடுமாறு கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!