ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதி
மாதவனூர் ஊராட்சி அலமனேந்தல், தோட்டமங்கலம் ஆகிய கிராம கண்மாய்களில் குடிமராமத் திட்ட புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் , திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் எஸ். கருணாஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர். பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் எஸ்.கார்த்திகேயன்,சிவராமகிருஷ்ணன், உதவி பொறியாளர்; பரமேஸ்வரன், பிரபா, வட்டாட்சியர்கள் முருகவேல்,ஆர்.மாதவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், அப்துல்ஜபார், ராஜா, பாண்டியன் உட்பட அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


You must be logged in to post a comment.