ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், நடிகருமான கருணாஸ் தேவிபட்டினத்தில் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதி உறுப்பினர்களில் முதல் ஆளாக ரூ.34 லட்சத்தை கொரானா
பேரிடர் நிவாரணமாகராமநாதபுரம் ஆட்சியரிடம் கொடுத்தேன். விவசாயிகளுக்கு நேரடி பயனளிக்கும் முதல்வரின் குடிமராமத்து திட்ட செயல்பாடு குறித்து சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஆய்வு செய்து முதல்வரிடம் அறிக்கை அனுப்ப உள்ளேன். அரசியல் என்பது எனக்கு தொழிலல்ல. அது ஒரு மக்கள் சேவை . திருவாடானை சட்டமன்ற தொகுதி தொகுதி மக்களுக்கு முதல்வர் அறிவித்த ரூ.1000 நிவாரணம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. எனது சம்பாதியத்தில் இருந்து ரூ.15 லட்சம் வரை உதவி உள்ளேன். ஊரடங்கு உத்தரவு கால கட்டத்தில் வாழ்வாதாரம் பாதித்த நலிவடைந்த நாடக நடிகர்கள், கிராமிய கலைஞர்களுக்கு உதவி செய்து உள்ளேன். மேலும் எனது கோரிக்கை படி நலிவடைந்த நாட்டுப்புற கலைஞர்கள் 180 பேருக்கு அரசு நிவாரணத் தொகை, அத்தியாவசியப் பொருட்கள் ராமநாதபுரம் ஆட்சியர் மூலம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஏழை, எளியோருக்கு 2 ஆயிரம் டன் அரிசி கொடுத்துள்ளேன்: அடிப்படையில் நான் ஒரு கூத்தாடி. போதிய வருமானமில்லை. பிற தொழில்களும் இல்லை. அம்பா சமுத்திரம் அம்பாளி ராம்நாத், கேமரா மேன் வேல்ராஜ் உடன் படமொன்றில் நடிக்க உள்ளேன். வட்டிக்கு பணம் கேட்டுள்ளேன். இன்னும் 10 நாளில் ஷூட்டிங் கிளம்பி விடுவேன். கட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கை பற்றிய படத்தில் பிக்பாஸ் 2 வெற்றியாளர் ரித்விகாவும் என்னுடன் இணைந்து நடிக்கிறார் என்றார்.


You must be logged in to post a comment.