இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, கீழக்கரை, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்தூர், சக்கரக்கோட்டை, ராமநாதபுரம், வெங்கலக் குறிச்சி, மணலூர், மேலூர் ஆகிய பகுதிகளில் கொரானா தொற்று உறுதியானதையடுத்து பாதித்தோர் 91 ஆக உயர்ந்தது. இதில் 51 பேர் பூரண குணமாகி வீடு திரும்பியிருந்தனர். இந்நிலையில், ராமநாதபுரத்தில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய ராமேஸ்வரம் அருகே ஒலைக்குடாவைச் சேர்ந்த 22 வயது பெண், பரமக்குடி அருகே மேல பெருங்கரையைச் சேர்ந்த 19 வயது பெண், ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டையைச் சேர்ந்த 43 வயது பெண் என 3 பேருக்கு நேற்று (02.6.2020) ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனை முடிவில் இம்மூன்று பேருக்கு கொரானா தொற்று உறுதியாக உள்ளது. ஓலைக்குடா பகுதியில் சுகாதார பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரானா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது.


You must be logged in to post a comment.