இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் ஊராட்சி தூய்மை காவலர்கள் 12 பேருக்கு அரிசி, படுக்கை விரிப்புகள் மற்றும்மண்டபம் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ்
கன்வீனர் எம். பாலமுருகன் நிதி ரூ.4800/- மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.பெருங்குளம் ரெட் கிராஸ் மருத்துவ மனையில் அனைவருக்கும் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டது. மேலும் , இராமநாதபுரம் எம்.எஸ்.கே., நகரில் நலிந்த பிரிவினருக்கு அரிசி , மளிகை சாமான்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் வழங்கப்பட்டது. ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் எஸ்.ஹாரூன், மாவட்ட செயலர் எம்.ராக்லாண்ட் மதுரம், பொருளாளர் சி.குணசேகரன், மண்டபம் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர் எம். பாலமுருகன், யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் எ. வள்ளி விநாயகம், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆடிட்டர் ஜே.ரமேஷ் பாபு, ஆசிரியர் முனைவர் எம்.உலகராஜ், தி.ஜீவா, எம் பழனிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


You must be logged in to post a comment.