பரமக்குடி அருகே அரியகுடி புத்தூர் கண்மாய் குடிமராமத்து பணி ஆட்சியர் துவக்கி வைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் அரியகுடி புத்தூர் கண்மாயில் குடிமராமத்து திட்ட புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் துவக்கி வைத்தார். பரமக்குடி எம்எல்ஏ. என்.சதன்பிரபாகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், அதிமுக., மாவட்ட செயலருமான எம்.ஏ.முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட ஆட்சியர் கூறுகையில், தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய்களின் பாசன விவசாய சங்கங்கள் அமைக்கப்பட்டு பல்வேறு பணிகள் சம்பந்தப்பட்ட விவசாய சங்கங்களின் மூலம் விவசாயிகளின் 10 சதவீத பங்களிப்புடன் வெளிப்படையாக மேற்கொள்ளப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில், குடிமராமத்து திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 141 பொதுப்பணித்துறை கண்மாய்கள், கால்வாய்கள் உட்பட 30,55,890 கன மீட்டர் பரப்பு தூர்வாரும் பணிகள் நடைபெற்றுள்ளன. 339 மடைகள், 79 கலுங்குகள் சீரமைக்கப்பட்டுள்ளன. நடப்பு நிதி ஆண்டில் (2020-21) ரூ.38.79 கோடி மதிப்பில் 61 கண்மாய்களில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அரியகுடி புத்தூர் கண்மாயில் ரூ.58.04 லட்சம் மதிப்பில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இக்கண்மாயானது 30 மில்லியன் கனஅடி கொள்ளளவு, 121.08 ஏக்டேர் ஆயக்கட்டு பரப்பு கொண்டது. இதில் 3.65 கி.மீ கரையை பலப்படுத்துதல், 4.15 கி.மீ வரத்துக்கால்வாய் தூர்வாருதல், 2 மடைகள் பழுதுபார்த்தல், 2 மடைகள் மீள்கட்டுதல் போன்ற புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றார். பொதுப்பணி துறை செயற்பொறியாளர் வெங்கிடகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் சிவராமகிருஷ்ணன், பொதுப்பணி துறை (நீர்வள ஆதார அமைப்பு) உதவி பொறியாளர்கள் பி.ஆனந்த்பாபுஜி, பி.ராஜேந்திரன், சீனிவாசன், வட்டாட்சியர் முருகவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!