தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கத்தினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டு அமலில் உள்ளது. ஆனால் கொரோனா தாக்கம் குறைந்துள்ள பகுதிகளில் தமிழக அரசு சில தளர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தியதைக் கண்டித்தும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து போக்குவரத்து சங்க ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.உசிலம்பட்டி மதுரை ரோட்டில் பிஆர்சி பணி மனை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.


You must be logged in to post a comment.