மண்டபம் முகாம் அகதிகள் குடும்பங்களுக்கு தொண்டு நிறுவனங்கள் உதவிக்கரம்

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் வசிக்கும் 510 அகதிகள் குடும்பங்களுக்கு ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகம் ஏற்பாட்டில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. தனித்துணை ஆட்சியர் சிவ.சிவகுமாரி வழங்கினார். துணை வட்டாட்சியர் ஷேக் ஜலாலுதீன் முன்னிலை வகித்தார்.கனடாவைச் சேர்ந்த காம்டு. இட் நிறுவனம் சார்பில் 373 குடுபங்களுக்கும், ஐக்கிய குடியேறிய நாடுகளின் தமிழ் பேசும் மக்களின் நிரந்தர நிறுவனம் சார்பில் 147 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களுக்கான நிதியை ஏற்றன. ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழக நிர்வாகி கே.கே.மதிவதனம்,மகளிர் பிரிவு நிர்வாகி ச.மாசிலாமணி, சுகாதாரப் பிரிவு நிர்வாகி யோ.விஜயராணி ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!