தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி மே15 இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது நேற்று முன் தினம் இரவு புயலாக உருவானது. அம்பன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை2ம் எண் கூண்டு நேற்று ஏற்றப்பட்டது. மணிக்கு 40 முதல் 50 கி. மீ.,வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு 11 மணியளவில் திடீரென சூறாவளி ஏற்பட்ட து. இதனால் மண்டபம் கோயில் வாடி, வடக்கு கடல் பகுதியில் கரையில் நிறுத்தியிருந்த படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதின. இதில் மண்டபம் நவீன்குமார், பிரிட்டோ, நம்புமாரி, பாலன், சாதிக், பழனிக்குமார், வின்சென்ட், வெற்றி வேல், கதியத்துல்லா, சதீஷ், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த வசந்தம்,செபஸ்தியான், சகாயராஜ், புனிதன், கென்சன்,ஆரோக்கிய செல்வம், அந்தோணி, புனித வளவன், ரிச்சர்ட், பாக்யநாதன்,தினேஷ்குமார்,உள்பட 25க்கும் மேற்பட்டோரின் விசைப்படகுகள் சேதமடைந்தன. படகுகளின் சேதம் குறித்து மண்டபம் மெரைன் போலீசார் மீன்வளத்துறை பணியாளர் ஆகியோர் கணக்கெடுத்து வருகின்றனர்.


You must be logged in to post a comment.