இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வேதாளை ஊராட்சி மக்களுக்கு நாடார் மகாஜன சங்க
பொதுச்செயலர் ஜி.கரிக்கோல்ராஜ் ஏற்பாட்டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் நிதி உதவியுடன் வேதாளை, குஞ்சார் வலசை அருப்புக்காடு, நடுமனைக்காடு, நாடார்குடியிருப்பு, இடையர் வலசை, சீனியப்பா தர்ஹா 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, மளிகை சாமான்கள் தொகுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி உச்சிப்புளி கிளை மேலாளர் எம்.வேலுச்சாமி, மண்டபம காவல் ஆய்வாளர் சபரி நாதன், சார்பு ஆய்வாளர் முத்து முனியசாமி, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், தனி பிரிவு காவலர் ராஜ்குமார், நாடார் மகாஜன சங்க நிர்வாகி எஸ்.முருகேசன், ம.பொன்னுச்சாமி (குஞ்சார் வலசை), ஜெயக்குமார், சந்தோஷம் (அருப்புக்காடு), எம். பொன்ராஜ் (நாடார் குடியிருப்பு), கே.தில்லை முருகன், பி. நம்புராஜன்(குஞ்சார் வலசை, எஸ்.கிருஷ்ணன் (நடுமனைக்காடு) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


You must be logged in to post a comment.