ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கோட்டை முனி மகன் ஜெகதீஸ்வரன், 50. இவர் மண்டபம் முகாம் அண்ணா கடை வீதியில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் முன்புறமுள்ள காலி நிலத்தில் மே 6
மதியம், கார் ஒன்று நீண்ட நேரமாக நின்றது. தகவல்படி, மண்டபம் போலீசார் அங்கு சென்று விசாரித்ததில், விற்பனைக்காக கஞ்சா ஏற்றி வந்த கார் என தெரிந்தது. காரில் இருந்த 22 கிலோ கஞ்சா மூடையை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஜெகதீஸ்வரன் மனைவி கண்மணியை (30) போலீசார் கைது செய்தனர். கஞ்சா விற்பனை தொடர்பாக கண்மணி மீது 2வது வழக்காகும். தப்பி ஓடிய ஜெகதீஸ்வரன் போலீசார் தேடி வருகின்றனர்.கஞ்சா விற்பனை தொடர்பாக ஜெகதீஸ்வரன் மீது 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன என போலீசார் தெரிவித்தனர்.


You must be logged in to post a comment.